Latestஉலகம்

ஐரோப்பிய சூப்பர் மார்க்கெட்டுகளின் குளிரூட்டிகளில் வெப்பநிலை 50° செல்சியஸாக உயர்வு; சைபர் தாக்குதல் காரணமா?

ஸ்டோக்ஹோம், நவம்பர்-3,ஐரோப்பாவின் பல நாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளின் குளிரூட்டும் கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் இணையவழித் தாக்குதல்களால் உணவுப் பொருட்கள் சேதமடைந்துள்ளன.

திங்கட்கிழமை ஸ்வீடன், பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள சில பல்பொருள் அங்காடிகள் இந்தப் பாதிப்பை எதிர்கொண்டன.

சில கடைகளில் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களின் வெப்பநிலை 50 பாகை செல்சியஸ் வரை உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஸ்வீடனில் பாதிக்கப்பட்ட ஒரு கடையில் உறையவைக்கப்பட்ட உணவுப் பொருட்களை ஊழியர்கள் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனிடையே, பெல்ஜியத்தைச் சேர்ந்த இறைச்சி விற்பனையாளர் ஒருவர் சுமார் 15 ஆயிரம் யூரோ மதிப்பிலான இறைச்சிப் பொருட்கள் சேதமடைந்ததாகக் கூறியுள்ளார்.

கடந்த மாதம் பிரான்ஸிலும் இதேபோன்ற இணையவழித் தாக்குதல் நிகழ்ந்ததாகவும், நூற்றுக்கணக்கான பல்பொருள் அங்காடிகள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் குளிரூட்டும் கட்டமைப்புகள் இணையவழித் தாக்குதல்களுக்கு உள்ளாகக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எனினும், இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதையும், அனைத்து சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதையும் அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!