Latestமலேசியா

தீபாவளி: ETS, EMUPlus இரயில் டிக்கெட்டுகளுக்கு அதிக வரவேற்பு; ஒதுக்கப்பட்ட இருக்கைகளையும் மிஞ்சிய முன்பதிவு

கோலாலம்பூர், நவம்பர்-3,தீபாவளியை முன்னிட்டு, KTMB-யின் ETS மற்றும் EMUPlus இரயில் சேவைகளுக்கான டிக்கெட் முன்பதிவு, ஒதுக்கப்பட்ட இருக்கைகளின் எண்ணிக்கையையும் மிஞ்சியுள்ளது.

நவம்பர் 5 முதல் 10-ஆம் தேதி வரையிலான பயணங்களுக்கு மொத்தம் 100,304 டிக்கெட்டுகள்
விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ Azlan Shah Al Bakri  தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டின் தீபாவளிக் காலத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு இருக்கை வசதிகள் 70 விழுக்காடு அதிகரிக்கப்பட்ட போதிலும், பயணிகளின் தேவை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று KL Sentral இரயில் நிலையத்தில் ETS இரயில் பயணிகளுக்கு தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் 600 தீபாவளிப் பரிசுக் கூடைகள் வழங்கிய நிகழ்ச்சிக்குப் பின்னர், Azlan அவ்வாறு சொன்னார்.

தீபாவளிப் பயணிகளின் தேவையைப் பூர்த்திச் செய்ய கூடுதலாக 14, 384 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக KTMB முன்னதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பயணிகள் முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிட்டு, அதிகாரப்பூர்வ வழிகளில் டிக்கெட்டுகளை வாங்குமாறும், இரயில் புறப்படுவதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாக நிலையத்தை வந்தடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!