
புத்ராஜெயா, மார்ச்-27-ஒருங்கிணைந்த தேசிய குடிநுழைவு முறையான NIISe, நாடு முழுவதும் உள்ள விமான, தரை, மற்றும் கடல் நுழைவாயில்களில் மார்ச் 31 முதல் கட்டம் கட்டமாக அமுலுக்கு வருகிறது.
கடந்தாண்டு செப்டம்பர் முதல் இவ்வாண்டு பிப்ரவரி பரீட்சார்த்த முறையில் இது அமுலாக்கம் கண்டது; அதில் கிடைத்த வெற்றியின் அடிப்படையில், தற்போது இச்செயலி முழு அமுலாக்கத்திற்கு வருவதாக உள்துறை அமைச்சான KDN கூறியது.
முதல் கட்டமாக, ஜோகூர், செனாய் அனைத்துலக விமான நிலையத்திலும், பின்னர் தரை மற்றும் கடல் சோதனைச் சாவடிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.
MyNIISe செயலி ஏற்கனவே 1.7 மில்லியன் பதிவிறக்கங்களையும், சுமார் 9 லட்சம் பதிவு செய்யப்பட்ட பயனர்களையும் பெற்றுள்ளது.
இந்த டிஜிட்டல் முறையின் கீழ், பயணிகள் QR குறியீடுகள் பயன்படுத்துவர்; தவிர eGate வசதிகளும், குடிநுழைவுப் பரிசோதனையை வேகமாக்கும் என KDN கூறியது.
எனவே, பயணிகள், தங்கள் பயணம் சீராக இருக்க, MyNIISe செயலியை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



