Latestமலேசியா

விக்னேஸ்வரனை நான் மதிக்கிறேன்; பிறரைப் போல வெளியே தூற்றியும் நேரடியா இனித்தும் பேசுவதில்லை – பிரதமர் அன்வார்

புத்ராஜெயா, ஏப்ரல் 27 – சில தலைவர்கள் எப்போதுமே அரசாங்கத்தை வெளியே தூற்றிக் கொண்டிருப்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறனர். இதனால் இழப்பு சாதாரண மக்களுக்குத்தான், அப்படிபட்ட தலைவர்களுக்கு அல்ல.
இதில் மாறுபட்டிருக்கிறார் ம.இ.கா-வின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்கினேஸ்வரன்.
இந்திய சமுதாயத்திற்கான தேவைகளை என்னுடைய கவனத்திற்கு நேரடியாக கொண்டு வந்து அதை தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார் விக்கினேஸ்வரன்.
அதனால்தான் அவர் மீதான மரியாதை எனக்கு அதிகம் என என புகழ்ந்துள்ளார் பிரதமர் அன்வார்.
நேற்று புத்ரா ஜெயாவில் எம்.ஐ.இடி கல்வி நிதி வழங்கும் விழாவில் கலந்து சிறப்புரையாற்றிய போது பிரதமர் இவ்வாறு கூறினார்.

இதனிடையே, இனத்திற்கிடையிலான முரண்பாடு உயர்மட்ட வர்க்கத்தினருக்குதான் பயனளிக்கிறது என்பதோடு குறைந்த வருமானம் பெறும் தரப்பினரை மேலும் ஏழ்மை நிலைக்கு தள்ளுகிறது.
தலைவர்கள் எப்போதும் தகராறு செய்துகொண்டிருப்பதை தவிர்த்து விட்டு மக்கள் நலனுக்காக பேச்சுவார்த்தை நடத்தி அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அன்வார் கேட்டுக் கொண்டார்.

நேற்று எம்.ஐ.இடி கல்வி நிதி வழங்கும் விழாவில் 15 மில்லியன் ரிங்கிட் தொகையிலான கல்வி உதவி தொகையும் கடனுதவியும் மொத்தம் 671 மாணவர்களுக்குக் வழங்கப்பட்டது.
இந்நிலையில், மறைந்த துன் எஸ்.சாமிவேலுவின் தலைமைத்துவத்திலிருந்தே செயல்பட்டு வரும் சிரம்பான்னிலுள்ள Tafe கல்லூரியின் உள்கட்ட வசதிகளை மேம்படுத்த 2 மில்லியன் ஒதுக்கீடு செய்வதாகவும் அன்வார் அறிவித்தார்.

எப்படிபட்ட பின்னணியில் இருந்து வந்தாலும் சமூக மேம்பாட்டுக்கு கல்வியே மிக முக்கிய அடித்தளம் என்பதை தாம் உணர்ந்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார். அதனால்தான் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தம்மை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தபோது உடனே கலந்து கொள்ள முன்வந்ததாக கூறினார்.
பிரதமர் மாணவர்களுக்கு கல்வி நிதி காசோலைகளை வழங்கியதோடு அவர்களளோடு அளவளாவினார். இந்த நிகழ்ச்சியில் உயர்க்கல்வி அமைச்சர் சம்ரி அப்துல் காடிர், ம.இ.கா துணைத்லைவர் டத்தோ ஶ்ரீ சரவணன், தொழில் முனைவர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் உட்பட பிரமுகர்கள் என ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!