Latestமலேசியா

8 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியரின் சிறைத்தண்டனை 10 ஆண்டுகளாக அதிகரிப்பு

புத்ராஜெயா, நவம்பர்-19,ஜோகூர், மூவாரில் 8 வயது மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் சிறைத்தண்டனை, 6 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

35 வயதான அரபு மொழி ஆசிரியர் Ahnaf Afiq Shairul Bazri-க்கு எதிராக, புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

2019-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி, மூவாரிலுள்ள தொடக்கப்பள்ளி ஒன்றின் நூலக அறையில், அந்த மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

முன்னதாக விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை, குற்றத்தின் கடுமைக்குப் போதுமானதல்ல என நீதிபதி Zaini Mazlan தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு தெரிவித்தது.

மாணவர்களைப் பாதுகாக்க வேண்டிய ஆசிரியரே, தம் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தியிருப்பது கடுமையான குற்றமாகும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இதையடுத்து, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் இரண்டு பிரம்படிகளும் உறுதிச் செய்யப்பட்டன.

மேலும், சிறைக்காலம் முழுவதும் மறுவாழ்வு ஆலோசனை பெறவும், விடுதலைக்குப் பின்னர் இரண்டு ஆண்டுகள் போலீஸ் கண்காணிப்பில் இருக்கவும் உத்தரவிடப்பட்டது.

அவரது மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்ட நிலையில், சிறைத்தண்டனையை உடனடியாகத் தொடங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!