Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

எளிதாகப் பரவக் கூடிய குரங்கம்மை நோயின் புதியப் பிறழ்வு சீனாவில் கண்டறிவு

ஹோங் கோங், ஜனவரி-9 – Mpox எனப்படும் குரங்கம்மை நோய்க் கிருமி பல நாடுகளுக்கு பரவி வரும் நிலையில், சீனாவில் clade Ib எனும் அதன் புதியப் பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது.

கோங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு சென்று வந்த வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து Ib துணைப்பிரிவு பரவி ஒரு கிளஸ்டரே உருவாகி விட்டதாக, சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறிற்று.

அந்த வெளிநாட்டவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களில் 4 பேருக்கு கிருமிப் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

தோல் வெடிப்பு மற்றும் கொப்புளங்கள் போன்ற இலேசான அறிகுறிகள் அவர்களிடம் காணப்பட்டன.

இந்த குரங்கம்மை நோய்க் கிருகி, நெருங்கிய தொடர்பு மூலம் பரவுகிறது; காய்ச்சல் போன்ற அறிகுறிகளையும் உடலில் சீழ் நிறைந்த புண்களையும் அது ஏற்படுத்துகிறது.

வழக்கமாக பெரியப் பாதிப்புகள் இல்லையென்றாலும், மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் இது மரணத்தில் போய் முடியலாம்.

கோங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட அத்தொற்றுநோய் அண்டை நாடுகளுக்கும் பரவியதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் உலக சுகாதார நிறுவனமான WHO, இரண்டாண்டுகளில் இரண்டாவது முறையாக mpox-சை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது.

கோங்கோவில் clade I எனப்படும் ஓர் உள்ளூர் திரிபுடன் இந்நோய்க் கிருமி பரவத் தொடங்கியது.

ஆனால் சீனாவில் கண்டறியப்பட்டுள்ள இந்த clade Ib மாறுபாடு, பாலியல் தொடர்பு உட்பட வழக்கமான நெருங்கிய தொடர்பு மூலம் மிக எளிதாகப் பரவுவதாகத் தெரிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!