
கலிஃபோர்னியா, நவம்பர்-16,உலகின் முன்னணி AI சிப் தயாரிப்பு நிறுவனமான Nvidia-யாவின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி Jensen Huang, அலுவலகக் கூட்டங்களில் மூத்த அதிகாரிகளை அவமதித்ததாகப் புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
New York Post வெளியிட்ட செய்தியின் படி, கடந்த பிப்ரவரி மாதம் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில், நிறுவனத்தின் மூத்த அதிகாரியான Jay Puri-யை Huang கடுமையாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, Puri-யை நோக்கி, _”உனக்குக் காய்ச்சல் வந்து, அது மோசமடைந்து, நீ இறந்துபோக வேண்டும்”_ என Huang கூறினாராம்.
இதனால், கூட்டத்தில் கடும் அமைதி நிலவியதாகச் சம்பவத்தை அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு சம்பவத்தில், மூத்த அதிகாரி ஒருவரை நோக்கித் தண்ணீர் பாட்டிலை வீசியதாகவும் Huang மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அலுவலகக் கூட்டங்களில் அவர் அடிக்கடி கோபமடைந்து, ஊழியர்களை மற்றவர்கள் முன்னிலையில் அவமதித்ததாகவும் கூறப்படுகிறது.
சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் Alice Huang-குடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, Jensen Huang கடந்த நவம்பர் 12-ஆம் தேதி Nvidia CEO பதவியிலிருந்து விலகினார்.
இருப்பினும், ஊழியர்களை அவமதித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அவர் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.



