Latestமலேசியா

ஜாலான் பெட்டாலிங்கில் அதிரடிச் சோதனை: RM270,000 மதிப்பிலான போலி உலகக் கிண்ண ஜெர்சிகள் பறிமுதல், 6 வெளிநாட்டவர்கள் கைது

கோலாலம்பூர், ஜூலை-11-2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிக்கான போலி ஜெர்சிகளை விற்பனை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் கடைகளின் மீது உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN அதிரடிச் சோதனை நடத்தியது.

​சுமார் RM270,150 மதிப்பிலான 5,403 போலி ஜெர்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

​இந்தச் சோதனையில் வங்காளதேசம் மற்றும் மியன்மாரைச் சேர்ந்த 6 வெளிநாட்டுப் பணியாளர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.

​இந்தக் கடைகளில் ஜெர்சிகளில் பெயர் மற்றும் எண்களை அச்சிடுவதற்கான பிரத்யேக இயந்திரங்கள் இருந்தன.

உள்ளூர் மக்களுக்கு ஒரு ஜெர்சி சுமார் RM50-க்கு விற்கப்பட்டது; ஆனால், சுற்றுப் பயணிகளிடம் ஒரு ஜெர்சிக்கு RM100-க்கும் மேல் வசூலிக்கப்பட்டுள்ளது.

​2019 வர்த்தக முத்திரைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தக் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களை KPDN அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

​பொது மக்கள் இதுபோன்ற போலிப் பொருட்களை விற்பனை செய்வது குறித்து தெரிந்தால், உடனடியாக KPDN அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!