Latestமலேசியா

TLDM தளத்தில் கால்பந்தாட்டத்தின் போது கடற்படை வீரர் கும்பலாகத் தாக்கப்பட்டதை போலீஸ் விசாரிக்கிறது

லூமூட், மே-31, பேராக், லூமூட்டில் உள்ள TLDM விளையாட்டரங்கில் திங்கட்கிழமையன்று அரச மலேசிய இராணுவத்தின் கடற்படை வீரர்கள் சண்டையிட்டுக் கொண்ட சம்பவத்தை போலீஸ் விசாரித்து வருகிறது.

திங்கட்கிழமை இரவு 7.15 மணி வாக்கில் ஏற்பட்ட அச்சண்டையில், கும்பலாகத் சரமாரியாகத் தாக்கப்பட்டதில் 26 வயது வீரர் காயமடைந்தார்.

MKPL மற்றும் PASKAL அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது அந்நபர் தாக்கப்பட்டதாக மஞ்ஜோங் மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Mohamed Nordin Abdullah கூறினார்.

“நடு விரலைக் காட்டி ஆபாச சைகைப் புரிந்ததாகக் கூறி, அவர்கள் என்னைத் தாக்கினார்கள். ஆனால் அது உண்மையல்ல;நான் ஒன்றுமே செய்யவில்லை” என அடி வாங்கியவர் விசாரணையில் தெரிவித்திருக்கின்றார்.

கும்பலாகத் தாக்கப்பட்டதில், அவருக்கு முகத்தில் வலது விலா எலும்பு, இடப்புற கழுத்து மற்றும் தலையில் காயமேற்பட்டு ஆயுதப்படை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளார்.

கலவரத்தில் ஈடுபட்டதன் பேரில் அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 147-வது சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக Mohamed Nordin கூறினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், சந்தேக நபர்களுக்கு அதிகபட்சமாக தலா 2 ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!