நிபோங் தெபால், ஏப்ரல்-28, பேராக், லூமூட் கடற்படைத் தளத்தில் (TLDM) 2 ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குக்குள்ளானதில் உயிரிழந்தோரின் அனைத்துக் குழந்தைகளின் சமூக-கல்வி நலன் பேணப்படும்.
கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் அந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
மொத்தமாக 10 குழந்தைகள் கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
பள்ளிப் படிப்பை முடிக்கும் வரையில் அவர்களின் அனைத்து நலன்களும் காக்கப்படும் என்றார் அவர்.
TLDM-மின் 90-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வான் சாகச ஒத்திகையில் ஈடுபட்டிருந்த போது, அவ்விரு ஹெலிகாப்டர்களும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின.
அதில், Skuadron 502 பிரிவின் விமானியாக பணியாற்றி வந்த Leftenant T. சிவசுதன் உள்ளிட்ட அனைத்து 10 பேரும் உயிரிழந்தனர்.
31 வயது சிவசுதன் கடந்த ஜனவரியில் தான் திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.