
தஞ்சோங் மாலிம், ஏப்ரல்-4-தஞ்சோங் மாலிமில் உள்ள சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகமான UPSI வளாகத்தில், ஸ்டோர் அறைக்குள் உயிரிழந்த நபர் பல்கலைக்கழக ஊழியர் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாறாக, Mohd. Radzi Ariffin எனும் 53 வயது அந்நபர், பல்கலைக்கழக விளையாட்டு மையத்தில் பணியாற்றிய தனியார் நிறுவன ஊழியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பூட்டப்பட்ட ஸ்டோர் அறைக்குள் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது முதலில் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியது.
ஆனால், தொடக்கக் கட்ட விசாரணைகளில் அவர் இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தற்போதைக்கு இச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மரணத்திற்கான உண்மைக் காரணம் குறித்து சவப்பரிசோதனை நடைபெற்று வருகிறது.



