
காஜாங் தாமான் இம்பியான் இன்டா (Taman Impian Indah) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து அங்கிருந்த துணிப் பெட்டியில் இருந்து கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மோசமான துர்நாற்றத்தினால் தாங்க முடியாத குடியிருப்பு வாசிகள் போலீசிற்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர்.
சம்பந்தப்பட்ட பெண் தொடர்பான அடையாளம் எதுவும் கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் குறித்து தண்டனைச் சட்டத்தின் 302 ஆவது விதியின் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவிக் கமிஷனர் Naazron Abdul Yusof தெரிவித்தார்.
இதனிடையே தனக்கு சொந்தமான அந்த அடுக்கு மாடி வீட்டில் மூன்று மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணும் ஒரு ஆடவரும் வாடகைக்கு தங்கியிருந்தாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
வாடகை பணம் தொடர்பாக அப்பெண்ணுடன் தொடர்பு கொள்ள முயன்றும் முடியதாதால் நேரடியாக சென்று பார்த்போது அவரை அவ்வீட்டில் காணவில்லை.
அந்த வீட்டின் அறையில் இருந்த துணிப் பெட்டியில் துர்நாற்றம் வீசியதால், அதன் ஜிப்பை திறக்க முயன்றபோது அது திறக்க முடியாததால் அச்சமடைந்து உடனடியாக போலீசிடம் தொடர்பு கொண்டதாக அந்த நபர் கூறினார்.



