Latestமலேசியா

அதிரடியாகக் குறைந்த எரிபொருள் விலை; டீசல் 30 காசுகளும், மானியமில்லா RON 97, RON 95 விலைகள் 25 காசுகளும் குறைவு

புத்ராஜெயா, ஜூன்-25,

தீபகற்ப மலேசியாவில் மானியமில்லா பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள், இன்று அதிகாலை தொடங்கி வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை கணிசமாகக் குறைந்துள்ளன.

​அவ்வகையில், மானியமற்ற RON 97 பெட்ரோல் விலை 25 காசுகள் குறைந்து, லிட்டருக்கு 4 ரிங்கிட் 10 சென்னாக விற்பனை செய்யப்படுகிறது.

​அதேபோல், மானியமற்ற RON 95 பெட்ரோல் விலையும் 25 காசுகள் குறைக்கப்பட்டு, லிட்டருக்கு 3 ரிங்கிட் 47 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

​டீசல் விலையைப் பொறுத்தமட்டில், லிட்டருக்கு 30 காசுகள் குறைக்கப்பட்டு, 4 ரிங்கிட் 7 காசுகளுக்கு விற்பனையாகிறது.

​இருப்பினும், தகுதியுடைய 14 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கான RON 95 மானிய விலை, எவ்வித மாற்றமுமின்றி ஒரு லிட்டர் 1 ரிங்கிட் 99 சென்னாகவே நீடிக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசல் விலை மாற்றமின்றி 2 ரிங்கிட் 15 காசுகளாகவே தொடருகிறது.

​உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் மேற்காசிய வட்டாரத்தில் பதற்றம் தணிந்து வருவதைத் தொடர்ந்து இந்த விலைக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!