
இந்தியா, செப்டம்பர் 29 – இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலுள்ள (Jharkhand, Ranchi) மதுக்கடைக்குள் புகுந்த குரங்கு ஒன்று சுமார் அரை போத்தல் வோட்காவைக் குடித்துவிட்டு மயங்கி தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓர்மான்ஜி சௌக் (Ormanjhi Chowk) பகுதியிலுள்ள கடைக்குள் புகுந்த குரங்கை ஊழியர்கள் முதலில் விரட்ட முயன்றதுடன், பிஸ்கெட்டைக் கொடுத்து கவனத்தைத் திருப்பவும் முயன்றனர். ஆனால், குரங்கு ஒரு வோட்கா போத்தலை எடுத்து உடைத்து, அதிலிருந்த மதுவைக் குடித்துள்ளது.
சுமார் அரை போத்தல் குடித்த பின்னர் குரங்கு சோர்வடைந்து, கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானப் பெட்டிகளின் மீது படுத்து நீண்ட நேரம் மயங்கிய நிலையில் தூங்கியது.
இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் காணொளியாகப் பதிவு செய்த நிலையில், அது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்தக் குரங்கு கடந்த சில நாட்களாக அப்பகுதியில் வீசப்பட்ட மதுபான போத்தல்களில் இருந்த மீதமுள்ள மதுவை நக்கி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



