Latest

உலகக் கிண்ண டிக்கெட் விலை மற்றும் விசா சர்ச்சையைத் தற்காத்துப் பேசிய FIFA தலைவர் Infantino

மெக்சிகோ சிட்டி, ஜூன்-11-​உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிக்கான விசா விவகாரங்கள் தொடர்பான விமர்சனங்கள் மற்றும் விண்ணை முட்டும் டிக்கெட் விலைகள் குறித்த புகார்களுக்கு, அனைத்துலகக் கால்பந்து சம்மேளனமான FIFA-வின் தலைவர் Gianni Infantino மறுப்பு தெரிவித்து, தனது தரப்பைத் தற்காத்துப் பேசியுள்ளார்.

​நாளை Estadio Azteca அரங்கில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Infantino பேசினார்.

அப்போது அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 48 அணிகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட போட்டியின் ஏற்பாடுகளை அவர் தீவிரமாக ஆதரித்து, நியாயப்படுத்தினார்.

அதாவது, ​ஆரம்ப விலையான 60 டாலர் என்பது அமெரிக்காவின் பிற முக்கிய விளையாட்டுப் போட்டிகளை விடக் குறைவே.

​சராசரி விலையும் 500 டாலருக்கும் குறைவு தான்.

சில பிரத்யேக டிக்கெட்டுகள் மட்டுமே 30,000 டாலர் வரை உயர்ந்துள்ளதாக அவர் கூறிக் கொண்டார்.

இதனிடையே, ​பாதுகாப்பு காரணங்களுக்காக சோமாலிய நடுவர் ஓமார் அர்டானுக்கு அமெரிக்கா அனுமதி மறுத்த சர்ச்சையை Infantino நிராகரித்தார்.

சந்தேகத்திற்குரிய அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்ததால், அவர் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதை FIFA உறுதிப்படுத்தியது.

_”இது துரதிர்ஷ்டவசமானது, எல்லாவற்றையும் எங்களால் கட்டுப்படுத்த முடியாது”_ என அவர் கூறினார்.

இவ்வேளையில்​அமெரிக்காவுடன் இராணுவ மோதலில் இருக்கும் ஈரானும் இந்த உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதை FIFA-வின் வெற்றியாக அவர் சித்தரித்தார்.

மேலும், அதிபர் டோனல்ட் ட்ரம்ப்பின் முழுமையான ஈடுபாடும் ஒத்துழைப்பும் இல்லையென்றால் அமெரிக்காவில் உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவது சாத்தியமற்ற ஒன்றாக இருந்திருக்கும் என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்தார்.

அதிபர் ட்ரம்ப்பும் சில ஆட்டங்களில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக Infantino உறுதிப்படுத்தியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!