புத்ராஜெயா, ஜூன்-10, பொதுச் சேவையில் தத்தம் துறைகளில் நிகழும் ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகளை மூடி மறைக்கும் துறைத் தலைவர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என பிரதமர் எச்சரித்துள்ளார்.
அத்தவறுகள் குறித்து மேலிடத்துக்கு புகாரளிப்பது கட்டாயம் எனக் கூறிய டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அது தொடர்பில் உரிய உத்தரவை வழங்குமாறு அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ முஹமட் சூகி அலியைப் பணித்துள்ளார்.
அரசு இலாகாக்களில் ஆண்டாண்டு காலமாக இது நடந்து வருகிறது; ஆக எதுவும் தெரியாது என துறைத் தலைவர் கை விரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என டத்தோ ஸ்ரீ அன்வார் சொன்னார்.
அத்தகையோருக்கு, ஊதிய உயர்வு நிர்ணயத்தின் போது பதவி உயர்வு கண்டிப்பாக இல்லை என்றார் அவர்.
பிரதமர் துறையின் மாதாந்திர சந்திப்புக் கூட்டத்தின் போது டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு சொன்னார்.