
கோலாலாம்பூர், மே-21-ஜோகூரைச் சேர்ந்த 59 வயது ஆடவர் ஒருவர், Magnum 4D Jackpot குலுக்கலில் 10.6 மில்லியன் ரிங்கிட் முதல் பரிசை வென்று கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மெக்னம் விளையாடி வரும் அந்த அதிர்ஷ்டசாலி, ஜோகூர் பாரு, பெர்மாஸ் ஜெயாவில் உள்ள மெக்னம் கடையில் தனக்கு வழக்கமான எண்களை வாங்கியுள்ளார்.
பின்னர், கூடுதலாக 20 ரிங்கிட் செலுத்தி Lucky Pick System Bet 5 பந்தயச்சீட்டையும் வாங்கியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்ற குலுக்கலில், அவர் வாங்கிய 2106, 0963 ஆகிய அந்த லக்கி பிக் சீட்டின் எண்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகளை வென்றதால், அவருக்கு இந்த ஜேக்போட் மெகா பரிசு அடித்துள்ளது.
சில நாட்கள் கழித்து பந்தயச்சீட்டைச் சரிபார்த்த போதே தனக்கு ஜேக்போட் விழுந்த விவரம் அவருக்குத் தெரியவந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் சில இரவுகள் தூக்கத்தை இழந்ததாகக் கூறிய அவர், தற்போதைக்குத் தனது வேலையை விடப்போவதில்லை என்றும், எதிர்காலத் திட்டங்களை மெதுவாகவே வகுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மெக்னம் நிறுவனம், வாடிக்கையாளர்கள் தங்களின் பந்தயச்சீட்டுகளை மெக்னம் செயலி (Magnum App) மூலம் எளிதாகச் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும், பொறுப்புணர்வுடன் விளையாடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.



