கோலாலம்பூர், ஜூலை-12, நாட்டிலுள்ள தேசிய வகை சீனப்பள்ளிகளில் பயிலும் பூமிபுத்ரா மாணவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் ஒரு மடங்கு அதிகரித்துள்ளது.
2014-ல் 11.67 விழுக்காடாக இருந்த அவ்விகிதம் இவ்வாண்டு18.52 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ளது.
அதற்கு நேர்மாறாக, அதே காலக்கட்டத்தில் சீனப் பள்ளிகளில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை சரிவுக் கண்டுள்ளது.
அதாவது பத்தாண்டுகளுக்கு முன் மொத்த மாணவர்களில் 88.33 விழுக்காடாக இருந்த அவர்களின் விகிதம் தற்போது 81.48 விழுக்காட்டுக்குக் குறைந்திருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.
தமிழ்ப்பள்ளிகளிலும் இந்த பத்தாண்டுகளில் பூமிபுத்ரா மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2014-ல் 0.38 விழுக்காடாக இருந்த அவ்விகிதம் இவ்வாண்டு 0.49 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ளது.
அதே காலக்கட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின் விகிதம் 99 விழுக்காடாக உள்ளதாக அமைச்சு கூறியது.
இதனிடையே SK எனப்படும் தேசியப் பள்ளிகளில் பூமிபுத்ரா மாணவர்களின் விகிதாச்சாரம் 93.81-ரிலிருந்து 95.12-க்கு உயர்ந்துள்ளது.
அதே சமயம் SK மாணவர்களில் பூமிபுத்ரா அல்லாதோரின் விகிதாச்சாரம் இந்த பத்தாண்டுகளில் 6.19-லிருந்து 4.88-க்குக் குறைந்துள்ளது.