Latestமலேசியா

கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை விபத்தில் குழந்தை உட்பட நால்வர் பலி

ஈப்போ, அக்டோபர்-5,பேராக், கெரிக்–ஜெலி கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் லாரி மற்றும் இரு கார்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில், பெண் குழந்தை உட்பட நால்வர் உயிரிழந்தனர்; சிறுவன் ஒருவன் படுகாயமடைந்தான்.

Tasik Banding அருகே, கெரிக்–ஜெலி சாலையின் 38.5-ஆவது கிலோ மீட்டரில் நேற்று பிற்பகல் சுமார் 1.30 மணிக்கு விபத்து நிகழ்ந்ததாக பேராக் போலீஸ் கூறியது.

19 வயது இளைஞர் ஓட்டிய Perodua Axia கார், 4 பயணிகளுடன் கெரிக்கிலிருந்து ஜெலி நோக்கிச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசைப் பாதைக்குள் நுழைந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த கார் முதலில் எதிரே வந்த மற்றொரு காருடன் மோதி, பின்னர் லாரியுடன் மோதியது.

இதில் கார் லாரியின் அடிப்பகுதிக்குள் சிக்கி, சுமார் 7 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.

19 வயது ஓட்டுநர், 31 வயது ஆடவர், 40 வயது பெண் மற்றும் ஒரு பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதே காரில் பயணித்த மற்றொரு சிறுவன் படுகாயங்களுடன் கெரிக் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டான்.

மற்ற கார் மற்றும் லாரியில் இருந்தவர்கள் காயமின்றி தப்பியதாக போலீஸார் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!