Latestமலேசியா

கிழக்குக் கரையில் மிக அதிக தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தைப் பதிவுச் செய்த பஹாங் – பெர்கேசோ

குவாந்தான், ஆகஸ்ட்-3 – இவ்வாண்டின் முதல் காலாண்டில், கிழக்குக் கரை மாநிலங்களிலேயே மிக அதிக தொழிலாளர் பங்கேற்பு விகிதமாக 65.3 விழுக்காட்டை பஹாங் பதிவுச் செய்துள்ளது.

​அதேவேளை, அம்மாநிலத்தின் வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் 1.9 விழுக்காடாகக் குறைந்து, உற்பத்தி, சேவை, விவசாயம் மற்றும் சுரங்கத் துறைகளில் வலுவான பொருளாதார வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

​மனிதவளத் துணையமைச்சர் டத்தோ Khairul Firdaus Akbar Khan அதனைத் தெரிவித்தார்.

இந்நிலையில், சமூகப் பாதுகாப்பு நிறுவனமான PERKESO நடத்தும் MYFutureJobs தளம் மூலம் வேலைதேடுபவர்களும் நிறுவனங்களும் திறம்பட இணைக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

​கடந்த 2023 முதல் இவ்வாண்டு ஜூலை வரை, பஹாங் மாநிலத்தில் 26,000-க்கும் மேற்பட்டோர் இத்தளத்தின் மூலம் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

​குவாந்தானில் நடைபெற்ற ‘இந்திரா மக்கோத்தா ‘MYFutureJobs’ வேலைவாய்ப்பு முகாமைத்’ திறந்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இம்முகாமில் 30 நிறுவனங்கள் பங்கேற்று 6,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்கின.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!