
மாச்சாங், ஏப்-15-மாச்சாங் , kampung Pangkal பகுதியில் உள்ள தனது வீட்டில், குளியலறையில் இருந்த வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கியதில், தானா மேரா மருத்துவமனையில் பணிபுரிந்த தாதி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
மாலை மணி 3.50 அளவில் நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 46 வயதான அவர், குடும்பத்தினரால் மச்சாங் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். எ
னினும், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததை கிளந்தான் சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ முகமட் அஸ்மான் யாக்கோப்
( Mohd Azman Yacob) உறுதிப்படுத்தினார்.
இந்தச் சம்பவத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.



