
குவாலா மூடா, ஆகஸ்ட்-17-கெடா, குவாலா மூடாவில் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை சட்டவிரோதமாக விற்க முயன்ற வழக்கில் குழந்தையின் பெற்றத் தாய் உட்பட 6 பேரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
5 வருடங்களாக பிள்ளை இல்லாத ஒரு தம்பதியும் அவர்களில் அடங்குவர்.
24 வயது தாய், வேறொரு பெண்ணின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்த்து, குழந்தையில்லாத அந்தத் தம்பதியின் பெயரில் குழந்தையைப் பதிவுச் செய்ய முயன்றதாக கெடா போலீஸ் தலைவர் டத்தோ Adzli Abu Shah தெரிவித்தார்.
இச்சம்பவத்தில்இடைத்தரகராகச் செயல்பட்ட 37 வயது ஆடவர் ஒருவர், மருத்துவமனை செலவுக்காக 9,000 ரிங்கிட்டும், தாய்க்கு 8,000 ரிங்கிட்டும் வழங்கியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
கைதுச் செய்யப்பட்ட 6 பேரும் 11 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, ஆள்கடத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட குழந்தை தற்போது சமூக நலத்துறையின் பராமரிப்பில் உள்ளது.



