Latestமலேசியா

கெடாவில் மூத்த மாணவரால் தமது மகன் கேலி வதைக்கு ஆளானதாக தந்தை புகார்  

அலோர் ஸ்டார், ஆகஸ்ட்.11-கெடாவில் சமயப் பள்ளியொன்றில் மூத்த மாணவரால் கேலி வதைக்கு ஆளாகி தங்களது ஒன்பது வயது காயமடைந்துள்ளதாக தம்பதியினர் ஒருவர் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த மாத இறுதியில் ஒரு வார விடுமுறைக்காகத் தமது மகனை Tahfiz சமயப் பள்ளி விடுதியிலிருந்து அழைத்துச் சென்ற போதுதான், அச்சம்பவம் தெரிய வந்ததாக அச்சிறுவனின் தந்தையான 45 வயது Syamsul Asrin Man கூறினார்.

விடுமுறையில் வீட்டில் இருந்த போது முகத்தில் இருந்த காயங்களைக் கவனித்து அது குறித்து கேட்ட போது, தாம் கீழே விழுந்து விட்டதாக தொடக்கத்தில் தமது மகன் கூறியதாகவும் பின்னர் வற்புறுத்திக் கேட்டதில் மூத்த மாணவர் மாணவர் ஒருவர் தம்மைக் குத்தியதாக ஒப்புக் கொண்டதாகவும் அத்தந்தை விவரித்தார்.

தாம் உடனடியாக சம்பந்தப்பட்ட சமயப் பள்ளியின் ஆசிரியரைத் தொடர்பு கொண்டு வினவியபோது அவர் அது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என கூறியதாக Syamsul மேலும் குறிப்பிட்டார்.

எனவே காவல் துறையில் புகார் கொடுத்த பின் மேல் பரிசோதனைக்காக தமது மகனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் அவர் சொன்னார்.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மூத்த மாணவர் தற்காலிகமாக இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்ட நிலையில், தங்கள் மகன் பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட முடிவு அதிருப்தியாக இருப்பதாகவும் Syamsul குறிப்பிட்டார்.

இவ்வேளையில் அச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மூத்த மாணவரிடமிருந்து காவல்துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் Kota Setar மாவட்டக் காவல் துறைத் தலைவர் ACP Syed Basri Syed Ali தெரிவித்துள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் முன், காயமுற்ற மாணவரின் மருத்துவ அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!