
பதினெட்டாவது எடிசன் திரை விருதுகளின் அறிமுக விழா சென்னை நகரில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திரை நட்சத்திரங்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்
.
நிகழ்ச்சியில், கடந்த 17 ஆண்டுகளாக எடிசன் திரை விருதுகள் கடந்து வந்த பயணத்தைப் பற்றிய சிறப்பு காணொளி வெளியிடப்பட்டது. அந்த காணொளி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது
.

எடிசன் விருது அமைப்பின் தலைவர் திரு. செல்வகுமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தனது உரையில், “எடிசன் விருது என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களின் கலைத்திறமையையும் அங்கீகரித்து விருது வழங்கும் தனிச்சிறப்புடைய அமைப்பாகும்” என்று குறிப்பிட்டார். மேலும், கடந்த ஆண்டு இந்த விழா மலேசியாவின் பினாங்கு மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றதையும் அவர் நினைவுகூர்ந்தார்
.
இந்நிகழ்ச்சியில், வரும் மே 24ஆம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ள 18வது எடிசன் திரை விருதுகளின் லோகோவை நடிகர் திரு. ராதாரவி, தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. வேல்முருகன், நடிகை அம்பிகா, மருத்துவர் சி.எம்.கே. ரெட்டி, இயக்குநர் விக்ரமன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினர்
.
திரை பிரபலங்கள் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், ஆன்லைன் வாயிலாக தங்களது வாக்குகளையும் அரங்கில் பதிவு செய்தனர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் திரைப் பின்னணிப் பாடகர் அந்தோணி தாசன், நடிகர் ஜெகன், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்
.
விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் துணைத் தலைவர் திரு. குமரேசன் பூங்கொத்து வழங்கினார். தொடர்ந்து, தலைவர் திரு. செல்வகுமார் அவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கி விருந்தினர்களை கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியை ஜான் தன்ராஜ் அவர்கள் தொகுத்து வழங்கினார்.



