
கோலாலம்பூர், ஜூன் 29 – கோலாலம்பூரை நோக்கி செல்லும் ‘லேபூராயா பெர்செக்குத்துவான்’ (Lebuhraya Persekutuan) சாலையில், பெரோடுவா கெம்பரா (Perodua Kembara) வாகன ஓட்டுநர் ஒருவர் இரண்டு வாகனங்களை மோதிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
ஜூன் 20 அன்று மாலை சுமார் 6.10 மணியளவில், ஷா ஆலாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கி சென்ற 59 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஆபத்தாக வாகனத்தைச் செலுத்தியுள்ளார்.
இந்த விபத்தில் ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பாதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு ஓட்டுநர் வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றதைத் தொடர்ந்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



