Latestமலேசியா

சிவப்பு விளக்கை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிளோட்டிகள்: சமூக ஊடகங்களில் சினத்தை வெளிப்படுத்திய பொதுமக்கள்

கோலாலம்பூர், ஆகஸ்ட்.03 – மோட்டார் சைக்கிளோட்டிகள் குழுவொன்று சிகப்பு விளக்கை மீறிச் சென்ற காணொளி ஒன்று, இணையவாசிகள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அச்செயல் பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது என அவர்கள் விமர்சித்துள்ளனர்.

இத்தகைய நடவடிக்கைகள் மற்ற சாலைப் பயனர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், விபத்து ஏற்பட்டால் அவசரகால மீட்புப் பணியாளர்களுக்குச் சுமையாக இருக்கும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இது போன்ற சாலை விதிமீறல்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என சமூக ஊடகப் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டத்தை மதிக்காத நிலையா? சட்டத்தை யார் நிலைநாட்டுவது? என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

DashCam Malaysia முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள 16 வினாடிகள் கொண்ட அந்தக் காணொளியில், மோட்டார் சைக்கிளோட்டிகள் குழுவொன்று எதிர் திசையில் பயணிக்கும் மற்ற சாலைப் பயனர்களின் பாதுகாப்பைக் கருதாமல் அலட்சியமாக இருக்கும் காட்சிகள் காணப்படுகிறது. அச்சம்பவம் திரங்கானுவில் நிகழ்ந்தாக நம்பப்படுகிறது, இருப்பினும், அச்சம்பவம் நடந்த சரியான இடம், தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட தகவல்களை இதுவரை உறுதிப்படுத்த இயலவில்லை.

திரங்கானுவில் ‘RXZ Members 8.0’ சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றச் சென்ற மற்றும் அங்கிருந்து திரும்பிய சில மோட்டார் சைக்கிளோட்டிகளை உட்படுத்திய உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில் அக்காணொளி வெளியாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!