Latestமலேசியா

செராஸில் பாதுகாப்பு மேற்பார்வையாளரை கத்தியால் வெட்டிய 15 வயது சிறுவன் கைது

செராஸ், மே-25-கோலாலம்பூர் செராஸில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவரை கத்தியால் வெட்டிக் காயப்படுத்தியதாக 15 வயது சிறுவன் ஒருவனை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட 43 வயது பாதுகாப்பு அதிகாரிக்கும், அந்த சிறுவனுக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம் மற்றும் தனிப்பட்ட மோதலே இந்த தாக்குதலுக்குக் காரணம் என தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பு மேற்பார்வையாளர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைதுச் செய்யப்பட்டுள்ள சிறுவன் மீது ஆபத்தான ஆயுதங்களால் கடுமையான காயம் விளைவித்தல் தொடர்பான குற்றச்சாட்டின் கீழ், குற்றவியல் சட்டத்தின் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பதின்ம வயது சிறுவன் கத்தி ஏந்திய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!