
இந்தோனேசியா, ஆகஸ்ட் 14 – போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட மலேசிய விமானியிடம் மலேசிய போதைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவான NCIDயின் அதிகாரிகள் நடத்திய விசாரணை இன்று வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத்து.
39 வயதான அந்த விமானியிடம் ஆகஸ்ட் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட விசாரணையில், மலேசியாவில் செயல்படும் போதைப்பொருள் கும்பல் மற்றும் அதன் சர்வதேச வலையமைப்பு குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது.
ஜூலை 28ஆம் தேதி ஜகார்த்தா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அந்த விமானியிடமிருந்து சுமார் 25 கிலோ எடையுள்ள, எக்ஸ்டசி மற்றும் மெத்தாம்பெட்டமைன் (ecstasy and methamphetamine) என சந்தேகிக்கப்படும் 70,000 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமார் 45 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.



