
தோக்யோ, ஏப்ரல்-21-ஜப்பானை நேற்று ரிக்டர் அளவைக் கருவியில் 7.7-ழாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியதை அடுத்து, அதைவிட பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பசிஃபிக் பெருங்கடலில் 2 கடல் மண்டலங்களில் அதற்கான சாத்தியம் அதிகமுள்ளது.
இதையடுத்து, Hokkaido, Fukushima, Ibaraki உள்ளிட்ட 7 பிரதேசங்களில் 182 நகர்ப்புறப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் திங்கட்கிழமை, ஏப்ரல் 27-ஆம் தேதி மாலை 5 மணி வரை முழு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொது மக்கள் அவசரகாலத்திற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக தேவையான உணவு, தண்ணீர் மற்றும் அவசர உதவி பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பசிஃபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ள ஜப்பான், நிலநடுக்கங்களுக்கு அடிக்கடி உள்ளாகும் நாடாக இருப்பதால், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது.



