Latestஉலகம்

ஜப்பான் ஒசாகாவில் 13 வது குளோபல் வர்த்தக உச்சி மாநாடு

உலகத் தமிழ் வர்த்தக சங்கம் இந்திய தமிழக அரசு ஆதரவில் ஒசாகா பிசினஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி (OBDA) வழிகாட்டுதலின்படி 13 வது குளோபல் வர்த்தக மாநாடு (Global Business Meet) ஜப்பானில் ஒசாகா நகரில் உள்ள மை டோம் (MyDome) அரங்கில் எதிர்வரும் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் தென்னிந்தியாவில் உள்ள சிறு குறுந் தொழில் அதிபர்கள், ஏற்றுமதி இறக்குமதியாளர்கள், தொழில் வாய்ப்புகளை தேடுவோர், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள், ட்ரேட் விசிட், முதலீடுகளை ஈர்த்தல் போன்றவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ளவர்த்தக சங்கங்கள், ஜப்பானில் உள்ள வர்த்தக சங்கங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. ஜப்பானில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால் பல்வேறு நிறுவனங்கள் ஜாப் ஒர்க்குகளை(Job work) தமிழகத்துக்கு வழங்க உள்ளன என உலகத் தமிழ் வர்த்தக சங்க தலைவர் செல்வகுமார் மற்றும் பொதுச் செயலாளர் குமரேசன் கூட்டாக தெரிவித்தனர்.

தொடர்புக்கு +917299992999 / +60166167708

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!