Latestமலேசியா

ஜாலான் அம்பாங் சொகுசு வீட்டில் துணிகரக் கொள்ளை: RM2.91 மில்லியன் மதிப்பிலான ரொக்கம் மற்றும் சொகுசுப் பொருட்கள் அபகரிப்பு

அம்பாங், செப்டம்பர்-9,கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள சொகுசு வீடு ஒன்றில் புகுந்த 5 முகமூடிக் கொள்ளையர்கள், 2.91 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ரொக்கம் மற்றும் சொகுசுப் பொருட்களைக் கொள்ளையடித்துத் தப்பியோடியுள்ளனர்.

​நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

28 வயது சீனப் பிரஜையின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள், வீடு முழுவதையும் சூறையாடியதாக வங்சா மாஜு மாவட்டப் போலீஸார் தெரிவித்தனர்.

​ரொக்கம், வெளிநாட்டு நாணயங்கள், தங்க நகைகள் மற்றும் சொகுசு கைக்கடிகாரங்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

அவ்வாடவரின் கைப்பேசியைச் சேதப்படுத்தியக் கொள்ளையர்கள், அவரின் கடப்பிதழையும் அபகரித்துச் சென்றனர்.

அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவருக்கு மோசமானக் காயம் எதுவும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் குறித்து ஆயுதமேந்திய கூட்டுக்கொள்ளை பிரிவின் கீழ் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!