
ஜோகூர் பாரு, செப்டம்பர்-18,7 ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து வீட்டு pitbull நாய் தாக்கியதில் படு காயமடைந்த ஒரு சிறுமிக்கு 500,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான இழப்பீடு வழங்க ஜோகூர் பாரு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜோகூர், எண்டாவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்திற்கு நாயின் உரிமையாளரான Lim Seer Hao முழுப் பொறுப்பு என நீதிபதி தீர்ப்பளித்தார்.
சம்பவத்தின் போது 10 வயதான அச்சிறுமி மீது சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நாய் அறுத்துக் கொண்டு வந்து தாக்கியதில், அவருக்கு முக எலும்பு முறிவுகள் மற்றும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
நீதிமன்றம் வழங்கிய மொத்தத் தொகையான RM517,643-ல், எதிர்கால மருத்துவச் செலவுகளுக்காக RM300,000 மற்றும் பொது இழப்பீடாக RM193,000 அடங்கும்.
சிறுமி அனுமதியின்றி வீட்டுக்குள் வந்ததாக நாய் உரிமையாளர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், வழக்குச் செலவுத் தொகையாக RM120,000 செலுத்தவும் நாய் உரிமையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



