Latestமலேசியா

திரெங்கானு-பஹாங் கடலில் எண்ணெய் துரப்பண மேடையில் அவசரக்கால பயிற்சியின்போது விபத்து; 3 தொழிலாளர்கள் பலி

குவாலா திரங்கானு, மே-25-திரங்கானு-பஹாங் கடலோரத்தில் அமைந்துள்ள Sepat எண்ணெய் துரப்பண மேடையில், அவசரக்கால வெளியேற்றப் பயிற்சியின்போது நிகழ்ந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 4 ஊழியர்கள், மூடிய அவசரக் கால மீட்புப் படகில் இருந்தபோது, அதை தாங்கும் வகையில் பிணைக்கப்பட்டிருந்த கேபிள் கம்பிகள் அல்லது கொக்கிகள் திடீரென உடைந்ததால் இத்துயரம் நிகழ்ந்துள்ளது.

இதனால் அந்த மீட்புப் படகு கடலுக்குள் தலைகீழாக விழுந்ததாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளான 4 பேரும் மீட்புக் குழுவினரால் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, குவாலா திரங்கானுவில் உள்ள சுல்தானா நூர் சஹிரா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

எனினும், அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் 3 பேர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

உயிரிழந்தவர்கள் முறையே 28 வயது Faezuan Hakim Bustaman, 38 வயது Ahmad Fikri Zakaria, 37 வயது Nik Hafifi Asri Ab Majid என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எலும்பு முறிவுகளுடன் 36 வயது Taufik Ruslan மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுளள்ளார்.

விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!