Latestமலேசியா

தேசிய, மலேசிய தினங்களை முன்னிட்டு ‘Rona Jiwa Malaysia’ கண்காட்சி; தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் 13 மாநிலங்களின் பாரம்பரியம் காட்சிக்கு

புத்ராஜெயா, செப்டம்பர்-5,தேசிய தினம் மற்றும் மலேசிய தினத்தை முன்னிட்டு, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் மலேசியத் தேசிய நூலகம், “Rona Jiwa Malaysia: ஒன்றிணைந்து தேசத்தை உருவாக்குவோம்” என்ற சிறப்பு கண்காட்சியை நடத்துகிறது.

செப்டம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சி, மலேசியாவின் 13 மாநிலங்களின் தனித்துவமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும்.

வருகையாளர்கள் மாநிலங்களின் வரலாறு, பாரம்பரிய ஆடைகளின் மாதிரிகள், பாரம்பரிய இசைக்கருவிகள், உணவுகள் மற்றும் விளையாட்டுகளைக் கண்டு களிக்கலாம்.

தவிர, நாட்டின் ஒற்றுமைக்கான உங்களின் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ள ‘Coretan Perpaduan” எனும் நடவடிக்கையிலும் பங்கேற்கலாம்.

பன்முகத்தன்மையைப் போற்றுவதன் மூலமும், பரஸ்பர மரியாதையை வலுப்படுத்துவதன் மூலமும் தேசிய அடையாளத்தை உருவாக்க இக்கண்காட்சி மிகவும் அவசியமானது என, அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் தெரிவித்தார்.

மலேசியத் தேசிய நூலகத்தின் Anjung Bestari கட்டடத்தின் முதல் தளத்தில், தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது.அனுமதி முற்றிலும் இலவசமாகும்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!