
புது டெல்லி, ஜூலை-25-சமூக வலைத் தளங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதிய வரலாறு படைத்துள்ளார்.
கடுமையான வினாத்தாள் கசிவு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் வெளியிட்ட இன்ஸ்டகிராம் ரீல், இதுவரை இல்லாத சாதனையாக 303 மில்லியன் பார்வைகளைக் கடந்து உலக சாதனை படைத்துள்ளது.
அண்மைய FIFA உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியின் போது BTS இசைக் குழுவை சந்தித்ததை பதிவிட்டு 300 மில்லியன் பார்வைகளைப் பெற்ற, சமூக ஊடகப் பிரபலம் IShowSpeed-டின் சாதனையை இந்த வைரல் வீடியோ முறியடித்துள்ளது.
இந்த மிகப்பெரிய டிஜிட்டல் வரவேற்பின் மூலம், பிரதமர் மோடி ஒரே இரவில் இன்ஸ்டகிராமில் கிட்டத்தட்ட 10 லட்சம் புதிய பின்தொடர்பாளர்களைப் பெற்றுள்ளார்.
இந்த மாபெரும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ள மோடி, _”நன்றி நண்பர்களே, உங்களின் அன்பு எனக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது”_ எனக் குறிப்பிட்டுள்ளார்.
நீட் வினாத் தாள் கசிவைத் தொடர்ந்து மாணவர்கள் பெரும் போராட்டங்களில் குதித்ததை அடுத்து, தேர்வு முறைகளை சீர்திருத்துவதற்காக மோடி அரசு புதிய கடுமையான சட்டங்களைக் கொண்டுவரும் வேளையில் இந்த சாதனை வீடியோ வெளியாகி கவனம் பெற்றுள்ளது.



