Latestமலேசியா

நாட்டின் எட்டு பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

கோலாலம்பூர், அக்-05-இன்று காலை 7 மணி நிலவரப்படி, நாட்டின் எட்டு பகுதிகளில் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு (API) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது. காற்றுத் தூய்மைக் குறியீட்டு மேலாண்மை முறை APIMS வெளியிட்ட தரவுகளில் அது தெரிய வந்திருக்கிறது.

ஜோகூர், Pasir Gudangங்கில் API குறியீடு மிக அதிகமாக 153 ஆக உள்ளது. Batu Pahatட்டிலும் Larkingனிலும் 152 ஆக இருக்கிறது. Segamatடில் 108 ஆக உள்ளது. சிலாங்கூரில் மிக உயர்வாக 154 என Johan Setiaவில் பதிவாகியுள்ளது. கோலாலம்பூரில் Cheras (152), Putrajaya (147), நெகிரி செம்பிலானின் Nilai (126) எனவும் API குறியீடுகள் இருக்கின்றன.

இதனிடையே, Batu Muda (99), Bukit Rambai (97), சிலாங்கூரில் Shah Alam (95), நெகிரி செம்பிலானில் சிரம்பான் (93), ஜோகூரில் குளுவாங் (93) உள்ளிட்ட 59 பகுதிகளில் API குறியீடுகள் மிதமான அளவில் பதிவாகியுள்ளன. சரவாக்கில் Serian IPD (98), Samarahan (95), Kuching (92), Miri, Sarikei மற்றும் Sri Aman (83), Sibu (80), ILP Miri மற்றும் Samalaju (79) என உள்ளன. நாட்டில் எந்தப் பகுதியிலும் காற்றின் தரம் நல்ல நிலையில் இல்லை.

API அளவு 0 முதல் 50 வரை நல்ல காற்றுத் தரத்தையும், 51 முதல் 100 வரை மிதமான நிலையையும், 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற நிலையையும் குறிக்கிறது. 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்றதாகவும், 300-க்கு மேல் அபாயகரமானதாகவும் வகைப்படுத்தப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!