Latestமலேசியா

பத்து காவான் பெட்ரோல் நிலைய RON95 தொட்டிகளில் தண்ணீர் கலந்ததற்கான ஆதாரம் இல்லை — KPDN

பினாங்கு, அக்டோபர்-5,பத்து காவானில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றின் RON95 சேமிப்பு டாங்கிகளில் தண்ணீர் கலந்திருந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அதற்கான எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை.

உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN-னின் பினாங்கு மாநில இயக்குநர் S. ஜெகன் இதனைத் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நிலையத்தில் பெட்ரோல் நிரப்பியப் பின்னர், சில வாகனங்கள் _start_ ஆகாதது உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டதாக சமூக ஊடகங்களில் முன்னதாக தகவல்கள் பரவின.

இதையடுத்து KPDN அதிகாரிகள், எண்ணெய் நிறுவனத்தின் பிரதிநிதி மற்றும் பெட்ரோல் நிலைய உரிமையாளருடன் இணைந்து விரிவான சோதனையை மேற்கொண்டனர்.

அவ்வகையில், RON95 டாங்கிகளின் Automatic Tank Gauge பதிவுகள், சோதனை நடைபெற்ற நாள் உட்பட அதற்கு முந்தைய 3 நாட்களுக்கு ஆய்வு செய்யப்பட்டன.

எனினும், அதில் தண்ணீர் இருந்ததற்கான எந்தப் பதிவும் கண்டறியப்படவில்லை.

மேலும், டாங்கிகளில் ‘Water Finding Paste’ பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நேரடி சோதனையிலும் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறி காணப்படவில்லை.

பம்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பெட்ரோலும் பார்வைக்கு தெளிவாக இருந்ததுடன், தூய்மைக்கேடு எதுவும் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், வாகனங்களில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பிரச்னைகளுக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் இணைந்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜெகன் உறுதியளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!