Latestஉலகம்

பனாமாவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் சேதம், சுனாமி எச்சரிக்கை மீட்டுக்கொள்ளப்பட்டது

பனாமா சிட்டி, அக்டோபர்-10,மத்திய அமெரிக்க நாடான பனாமாவில், 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

நேற்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பனாமாவின் Herrera மாநிலத்தில் உள்ள Pitaloza Arriba பகுதிக்கு அருகே, சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் பனாமா சிட்டி மட்டுமின்றி, அண்டை நாடுகளிலும் உணரப்பட்டன.

இதனால் அச்சமடைந்த மக்கள், வீடுகள் மற்றும் அலுவலகக் கட்டடங்களிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.

சில பகுதிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள் இடிந்து விழுந்ததுடன், சாலைகளிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 6.6 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும், 40-க்கும் மேற்பட்ட தொடர் அதிர்வுகளும் பதிவாகின.

இதனால், பனாமா, கொலம்பியா, இக்குவடோர் உள்ளிட்ட பசிஃபிக் கடலோர நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும், சுனாமி அபாயம் நீங்கியதைத் தொடர்ந்து அந்த எச்சரிக்கை பின்னர் மீட்டுக் கொள்ளப்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், உயிரிழப்புகள் எதுவும் உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இதற்கிடையே, நாட்டு மக்கள் அமைதி காக்குமாறு பனாமா அதிபர் José Raúl Mulino கேட்டுக் கொண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!