Latestமலேசியா

பாசீர் கூடாங்கில் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் லாரியுடன் போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற ஆடவர் கைது; சந்தேக நபருக்கு 27 முந்தைய குற்றப் பதிவுகள்

பாசீர் கூடாங், அக்டோபர்-1,ஜோகூர், பாசீர் கூடாங்கில், திருடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் லாரியுடன் போலீஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டார்.

அவருக்கு ஏற்கனவே குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான 27 பழையக் குற்றப் பதிவுகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை சுமார் 7.20 மணியளவில், பிளெந்தோங்கில் (Plentong) லாரி ஒன்று காணாமல் போனதாகவும், அது திருடப்பட்டிருக்கலாம் என்றும் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர், தஞ்சோங் லங்சாட் தொழிற்பேட்டை பகுதியில் அந்த லாரியை பொது மக்கள் கண்டு போலீஸாருக்குத் தகவல் வழங்கினர்.

போலீசார் லாரியை நிறுத்த முயன்றபோது, சந்தேக நபர் நிறுத்த மறுத்ததுடன், தப்பிச் செல்லும் முயற்சியில் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதாகக் கூறப்படுகிறது.

மேலும், அவர் போலீஸ் ரோந்து வாகனம் ஒன்றையும் மோதியுள்ளார்.

எனினும், போலீஸார் விடாமல் துரத்தியதில், சுமார் காலை 10.20 மணியளவில் பாசீர் கூடாங்கில் அவர் கைதுச் செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொட்டலம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

மேலும், சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதிச் செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் போலீஸார் பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!