
மணிலா, செப்டம்பர் 10 — பிலிப்பைன்ஸின் பாலவான் மாகாணத்தில் சுற்றுலாப் பகுதி அருகே பயணிகள் படகு தீப்பிடித்ததில் 5 பேர் உயிரிழந்ததுடன், 87 பேர் காணாமல் போயுள்ளனர்.
அந்தப் படகு புதன்கிழமை இரவு கரையிலிருந்து சுமார் 2.2 கிலோமீட்டர் தொலைவில் தீப்பிடித்தது. படகில் மொத்தம் 143 பேர் இருந்ததாக பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை (PCG) தெரிவித்தது.

இதுவரை 42 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 38 பேர் பயணிகளும், நான்கு பேர் படகு பணியாளர்களும் ஆவர். இந்நிலையில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மீதமுள்ளவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தீயை அணைக்கும் முயற்சியும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. படகு மணிலாவில் இருந்து புறப்பட்டதாக MarineTraffic தரவுகள் தெரிவிக்கின்றன.



