
கோலாலம்பூர், செப்டம்பர்-2-கோலாலம்பூர், புடுவில் உள்ள ஓர் இரவு கேளிக்கை விடுதிக்கு வெளியே நிகழ்ந்த வன்முறை மோதல் தொடர்பாக 19 முதல் 30 வயதுக்குட்பட்ட 5 ஆடவர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
சமூக வலைத் தளங்களில் வைரலான 38 வினாடி வீடியோ பதிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Esperance Pudu விடுதிக்கு வெளியே சில நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு, பின்னர் பெரிய அளவிலான மோதலாக மாறியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுச் செய்யப்பட்ட அனைவரும் ஏற்கனவே வன்முறைச் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வழக்குகள் தொடர்புடையவர்கள் என வங்சா மாஜு போலீஸ் கூறியது.
சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கருப்பு நிற Perodua Myvi கார் ஒன்றை பறிமுதல் செய்துள்ள போலீஸார், இதில் தொடர்புடைய மற்ற சந்தேக நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கொலை முயற்சி, ஆபத்தான ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டது மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.



