Latestமலேசியா

புதிய MyKad அறிமுகம்: அரசின் உதவித் திட்டங்களுக்கு பாதிப்பு இல்லை

புத்ராஜெயா, மே-14,புதிய MyKad அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அரசாங்கத்தின் உதவித் தொகை வழங்கும் திட்டங்களில் எந்த தடையும் ஏற்படாது என்று தேசியப் பதிவிலாகா தெரிவித்துள்ளது.

SARA உதவித் திட்டம் மற்றும் BUDI MADANI எரிபொருள் மானிய திட்டம் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழக்கம்போல தொடர்ந்து வழங்கப்படும் JPN கூறியது.

புதிய MyKad அட்டைகளுக்கு மாற்றப்படும் தகவல்கள் அனைத்தும் மத்திய தரவுத்தள முறையின் மூலம் இயல்பாகவே மாற்றப்படும் என்பதால், தகுதியானவர்கள் உதவிகளை பெறுவதில் சிக்கல் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் முதல் தேதி அறிமுகமாகும் புதிய My Kad அட்டைகளுக்கு தற்போதைய அட்டைகளை உடனடியாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் JPN மீண்டு தெளிவுப்படுத்தியது.

புதிய MyKad-டில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், அடையாள மோசடிகளை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும், நாடு முழுவதும் படிப்படியாகவே இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் JPN கூறிற்று.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!