Latestமலேசியா

பெந்தோங் கோர விபத்து: பலியான நால்வர் SOCSOவின் திட்டங்களின் கீழ் சலுகைப் பெறத் தகுதியானவர்கள்

கோலாலம்பூர், ஜூலை-27-கடந்த 25 ஆம் தேதி Bentong, Jalan Karak Lamaவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஆறு பேரில் நால்வர், சமூகப் பாதுகாப்பு நிறுவனமான SOCSOவின் பல்வேறு சலுகைகளைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

வி. முகிலன், ஏ. கணபதி ராஜா, கே. அழகநாதன் மற்றும் எம். பரதன்மன் ஆகியோரே அவர்கள்.

SOCSOவில் தொடர்ந்து பங்களிப்பு செய்து வந்த அந்நால்வரும், LINDUNG 24 Jam எனும் 24 மணிநேரப் பாதுகாப்புத் திட்டம்’ மற்றும் ‘இயலாமைத் திட்டம்’ ஆகியவற்றின் மூலம் சலுகைகளைப் பெறத் தகுதியுடையவர்களாக இருக்கின்றனர்.

உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினரும் ஒருமுறை வழங்கப்படும் இறுதிச் சடங்குக்கான மூவாயிரம் ரிங்கிட் உதவித்தொகையைப் பெறத் தகுதியுள்ளவர்கள்.

மேலும், முகிலனின் குடும்பத்தினர் ‘இயலாமைத் திட்டத்தின்’ கீழ் வழங்கப்படும் Survivors’ Pension பெறத் தகுதியுடையவர்கள். அவர்களின் தனிப்பட்ட பங்குகளின் அடிப்படையில் மொத்தம் RM562.50 வழங்கப்படும். அவரது மனைவி வாழ்நாள் முழுவதும் தொகையைப் பெறுவார். அவரது இரண்டு வயதுக் குழந்தைக்கு 21 வயது பூர்த்தியாகும் வரையோ அல்லது முதல் பட்டப்படிப்பை முடிக்கும் வரையோ இச்சலுகை கிடைக்கும்.

அழகநாதனின் குடும்பத்தினரும் இதே சலுகையைப் பெறத் தகுதியுடையவர்கள். இவர்களுக்கு மொத்தம் RM564.36 வழங்கப்படும். இத்தொகை அவரது பெற்றோருக்கு வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும், அதேவேளையில் அவரது உடன்பிறப்புகள் 21 வயது அடையும் வரை இச்சலுகையைப் பெறுவார்கள் என SOCSO அறிக்கையொன்றில் தெரிவித்தது.

இவ்வேளையில், கணபதி ராஜா மற்றும் பரதன்மன் ஆகியோரின் குடும்பத்தினர் LINDUNG 24 Jam திட்டத்தின் கீழ் வழங்கப்படும் FOT எனும் சார்ந்திருப்போர் நலத் திட்டப் பலனைப் பெறத் தகுதியுடையவர்கள்.

24 மணிநேரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பைப் பெற அவர்கள் எடுத்த முடிவு நிம்மதியை அளித்துள்ளது. அதன் மூலம், குடும்பத்தினர் மட்டும் தனியாகச் சுமையைச் சுமக்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளதாக SOCSO மேலும் விளக்கியது.

கணபதி ராஜாவின் பெற்றோர் வாழ்நாள் முழுவதும் இச்சலுகையைப் பெறுவார்கள். 21 வயதுக்குட்பட்ட அவரது உடன்பிறப்புகளும் RM1,647 மதிப்பிலான சலுகையைப் பெறத் தகுதியுடையவர்கள்.

பரதன்மனின் குடும்பத்தினருக்கும் சலுகை கிடைக்கும். அவரது பெற்றோரும் உடன்பிறப்புகளும் மாதம் RM891 வீதம் FOT தொகையைப் பெறுவார்கள்.

அதே வேளை இருவருக்கு பங்களிப்புப் பதிவுகள் எதுவும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் சலுகைகளைப் பெறத் தகுதியற்றவர்கள் ஆகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!