
கோலாலாம்பூர், ஜூலை-17-சர்ச்சைக்குரிய ‘மடானி’ (MADANI) சிறப்பு வாகனப் பதிவு எண் விவகாரத்தில், காப்புரிமை மீறலில் ஈடுபட்டதற்காக, சாலைப் போக்குவரத்து இலாகாவான JPJ தலைமை இயக்குநருக்குக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
பாதிக்கப்பட்ட lham Madani நிறுவனத்தின் திட்ட இயக்குநர் Hasan Azhari Hashim தொடர்ந்த சிவில் வழக்கில், அவருக்கு 40,000 ரிங்கிட் இழப்பீடும், மேலும் 25,000 ரிங்கிட் நீதிமன்றச் செலவுத் தொகையும் வழங்குமாறு JPJ-வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாகத் நிராகரிக்கப்பட்ட தனது படைப்புத் திட்டத்தையும், விளம்பரப் பொருட்களையும், JPJ நிர்வாகம் தங்களின் பொது ஏலத்திற்குப் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாகப் புகார்தாரர் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட இந்த மடானி வாகனப் பதிவு எண் ஏலத்தின் மூலம், அரசாங்கத்திற்கு 2.62 மில்லியன் ரிங்கிட் வருவாய் கிடைத்தது.
இதில் MADANI 6 என்ற எண், அதிகபட்சமாக 68,888 ரிங்கிட்டுக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய JPJ-வுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.



