
சிரம்பான், ஜூலை-31 – மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான ‘மித்ரா’ திட்டங்களின் வாயிலாக, இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 65.5 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி விநியோகிக்கப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலான் சிரம்பானில் இந்தியச் சமூகத்துடன் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துகொண்ட நிகழ்வுக்குப் பிறகு பேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், மடானி அரசில் எந்தவொரு சமுதாயமும் புறக்கணிக்கப்படாது என உறுதிபடத் தெரிவித்தார்.
கல்வி, சிறு தொழில் முனைவோர் மேம்பாடு, B40 குடும்பங்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் ‘ஆரோக்கியா மடானி’ (Arogya Madani) வழி டயாலிசிஸ் மருத்துவ உதவிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்ப்பள்ளிகளுக்கான Smard Board விவேகப் பலகைகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மடிக்கணினி உதவிகளும் இதில் அடங்கும்.
இந்தியச் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக மித்ராவின் ஒட்டுமொத்த ஆண்டு நிதி ஒதுக்கீடு வரலாற்றிலேயே இல்லாத வகையில் 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதனடிப்படியில்
மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் இத்தகைய திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.



