Latestஉலகம்

மெக்ஸ் நெடுஞ்சாலையில் வங்காளதேச இளைஞர் மரணம் -ராணுவ அதிகாரி மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஏப்-30-கடந்த வாரம் மெக்ஸ் விரைவுச்சாலையில் அட்வான்ஸ் கேமிங் என்றழைக்கப்பட்ட, வங்காளதேசத்தைச் சேர்ந்த பிரபலமான விளையாட்டு உள்ளடக்க உருவாக்குநரின் மரணத்திற்குக் காரணமானதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு இராணுவ அதிகாரி, இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மாஜிஸ்திரேட் இல்லி மரிஸ்கா கலிசான்( Illi Marisqa Khalizan ) முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை புரிந்துகொண்டதாக 31 வயது கேப்டன் ஜைட் பைட் அர்ஹான், (Jaid Faid Arhan ) தலையசைத்தார்.

எனினும் அவருக்கு எதிராக எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

ஏப்ரல் 23 ஆம் தேதி விடியற்காலை மணி 5.30க்கு ஜாலான் Salak Selatan-னிலிருந்து Jalan Tun Razak நோக்கிச் செல்லும் MEX நெடுஞ்சாலையில், முசாஹித் மில்லாத் (Muzahid Millad ) என்பவருக்கு மரணத்தை ஏற்படுத்தியதன் மூலம் Jaid Faid மீது கொலைக் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் அல்லது 12 முறைக்குக் குறையாமல் பிரம்படி கொடுக்கப்படும் தண்டனைச் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் Jaid Faid மீது குற்றச்சாட்டப்பட்டது.

இதனிடையே மதுபோதையில் வாகனம் ஓட்டி, பயணிக்கும், ஓட்டுநருக்கும் காயம் ஏற்படுத்தியதாக மற்றொரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் Jaid Taj மீது இரண்டாவது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.

அவர் மீதான குற்றச்சாட்டு எதிர்வரும் ஜூலை 21 ஆம் தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!