Latestமலேசியா

ரொம்பின் மதப் பள்ளியில் பகடிவதை: 7 மாணவர்கள் கைது

பஹாங், செப்டம்பர் 23 – பஹாங், ரொம்பினிலுள்ள மதப் பள்ளியில் நடந்த இரண்டு பகடிவதை சம்பவங்கள் தொடர்பாக ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அதே பள்ளி விடுதியில் தங்கியிருந்த 14 வயதுடைய மூன்று மாணவர்கள் என பஹாங் இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் அயூப் (Datuk Azry Akmar Ayob) தெரிவித்தார்.

செப்டம்பர் 12ஆம் தேதி நடந்த முதல் சம்பவத்தில் இரு மாணவர்கள் பாதிக்கப்பட்டதையடுத்து, படிவம் 4 மற்றும் 5 மாணவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

இரண்டாவது சம்பவத்தில் படிவம் 2 மாணவர் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இரு சம்பவங்களிலும் தொடர்புடைய நான்கு பேர் உட்பட, கைது செய்யப்பட்ட அனைவரும் போலீஸ் உத்தரவாதத்தில் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வழக்குகள் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்திடமிருந்து மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கம் தொடர்பான அறிக்கைகளைப் பெற்று, போலீசார் விசாரணையை முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!