Latestமலேசியா

வெளிநாட்டு நடுவர்களுக்குப் பாலியல் இலஞ்சம்? – தென் கொரியக் கால்பந்து சங்கத்தில் போலீஸ் அதிரடிச் சோதனை

சியோல், ஆகஸ்ட்-8-வெளிநாட்டு நடுவர்களுக்குப் பாலியல் இலஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தென் கொரியக் கால்பந்து சங்கம் (KFA) தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

2011 மார்ச் முதல் 2012 மார்ச் வரையிலான காலக்கட்டத்தில், உலகக் கிண்ண மற்றும் ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டங்களை உட்படுத்தி குறைந்தது 7 தடவை இது அரங்கேறியுள்ளது.

2016-ஆம் ஆண்டே இது குறித்து அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சு விசாரணை நடத்தி அறிக்கைத் தயாரித்த போதிலும், இந்த 10 ஆண்டுகளாக அது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான், ​JTBC தொலைக்காட்சி ஊடகம் இந்த முறைகேட்டை அண்மையில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

இதைத் தொடர்ந்து, கொரியப் போலீஸார், தலைநகர் சியோலிலுள்ள KFA தலைமையகத்தில் அதிரடிச் சோதனை நடத்தினர்.

​ஏற்கனவே தேசிய அணியின் பின்னடைவு மற்றும் பயிற்சியாளர் நியமனச் சர்ச்சைகளால் விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்த இலஞ்சப் புகார் தென் கொரியக் கால்பந்து உலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

​கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்துத் தென்கொரியப் போலீஸார் மேல் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!