Latestஉலகம்

அட்லாண்டிக் பெருங்கடல் உல்லாசக் கப்பலில் மர்ம நோயால் மூவர் உயிரிழப்பு; hantavirus எனச் சந்தேகம்

கேப் வெர்ட, மே-4-அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு சொகுசு உல்லாசக் கப்பலில், மர்ம நோய் பாதிப்பால் 3 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அனைத்துலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு ‘hantavirus’ தொற்று காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தீவிர காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கப்பலில் உள்ள மேலும் சிலருக்குப் பாதிப்பு அறிகுறிகள் தென்படுவதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உலக சுகாதார நிறுவனமான WHO இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளதுடன், கப்பலில் உள்ளவர்களின் பாதுகாப்பு குறித்துத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

பொதுவாக எலிகள் போன்றவற்றால் இந்த ‘hantavirus’ மனிதர்களுக்குப் பரவுகிறது.

இந்நிலையில், கப்பலில் இத்தகைய கிருமிகள் எவ்வாறு பரவின என்பது குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கப்பல் தற்போது துறைமுகத்திற்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அங்குள்ள பயணிகளுக்குத் தீவிர மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்கப் பன்னாட்டுச் சுகாதாரக் குழுவினர் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!