Latestமலேசியா

அனுமதியின்றி மலாக்கா முதலமைச்சரின் படத்தை கே.கே .மார்ட் பயன்படுத்துவதா? அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் கண்டனம்

ஜாசின், மார்ச் 25 – மலாக்கா முதலமைச்சர் டத்தோஸ்ரீ Ab Rauf Yusoh பின் புகைப்படத்தை அவரது அனுமதியின்றி கடந்த சில நாட்களாக தனது வர்த்தக இடங்களில் பயன்படுத்திவரும் K.K Mart மினி மார்க்கெட்டின் செயல் குறித்து அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் Muhamad Akmal Saleh கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் Abdul Rauf புடன் தாம் தொடர்பு கொண்டதாக Muhamad Akmal தெரிவித்தார். 2024ஆம் ஆண்டில் மலாக்காவுக்கு வருகை புரியும் ஆண்டை முன்னிட்டு Rahman Berkat விற்பனை பெருவிழா அறிவிப்புக்கான பதாகையில் தங்களது வர்த்தக இடத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக திட்டமிட்டே மலாக்கா முதலமைச்சரின் புகைப்படத்தை அந்த விற்பனை நிலையம் பயன்படுத்தியிருப்பதையும் அவரிடமிருந்து தாம் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளதாக Muhamad Akmal கூறினார்.

Allah பதத்தை கொண்ட காலுறைகளை விற்பனை செய்தது தொடர்பாக சர்ச்சைக்குள்ளான KK Mart தவறான பதாகையை தொங்கவிட்டுள்ளது. மன்னிப் கேட்டுக் கொள்ளும் பதாகையை KK Mart தொங்கவிட வேண்டும் என்பதைத்தான அம்னோ இளைஞர் பிரிவு விரும்புகிறது. எனவே நடப்பு சட்டத்திற்கு எதிராக அந்த மினி மார்க்கெட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ஊராட்சி மன்றத்திற்கு நாங்கள் கோரிக்கை விடுத்திருக்கிறோம் என மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினருமான Muhamad Akmal தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!